#BREAKING: தமிழகத்தில் மேலும் 29,870 பேருக்கு கொரோனா.. 33 பேர் உயிரிழப்பு!

In Tamil Nadu, 29,870 people have been diagnosed with corona infection in the last 24 hours, bringing the total to 30,72,666 so far.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்வு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், மேலும் 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 28,561 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 29,870 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,145 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,87,358 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 21,684 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 28,48,163 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னை – 7,038, கோயம்புத்தூர் – 3,653, செங்கல்பட்டு – 2,250, கன்னியாகுமரி – 1,248, திருவள்ளூர் – 1,016 ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node