தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் […]
நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என […]
தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு தொற்று உறுதி. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இன்று ஒரேநாளில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா […]
புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். மூன்றாவது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று […]
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 32,79,284 -ஆக உயர்வு. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 28,515-ஆக இருந்த நிலையில், இன்று 26,533-ஆக குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32,79,284 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த பலியானோர் […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த நாட்களாக 30 ஆயிரத்திக்கும் மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, 29,976 ஆக உள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,24,236 ஆகவும், கடந்த 25 மணி நேரத்தில் 47 பேர் […]
தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 1,57,732 மாதிரிகள் டபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில், இன்று 30,580 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் […]
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், மேலும் 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 28,561 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 29,870 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த […]
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பதிப்பில் இருந்து 3,043 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை […]
தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவத்துறை அமைச்சர் தகவல். நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்கி வரும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை […]
B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கும், நாளை முதல் 29-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பிஎஸ்சி நர்சிங் படிப்பில் அரசு கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விளையாட்டு […]
பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டபடிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. Nursing, B.Pharm., உள்ளிட்ட Para […]
வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை. மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதனமை நோக்கம் என்றார். விபத்துக்கு மிக முக்கியமான காரணம் வேகம் தான். சாலையில் வாகனத்தை ஓட்டும் […]