தமிழக தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் – மத்திய அமைச்சர்

Union Minister Prakash Javdekar has said that he hopes the BJP will win more seats in Tamil Nadu.Congress is seeing a decline everywhere.

தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மறைமலை நகரில் மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து தனது ஆட்சியை நிலைநாட்டி கொண்டியிருக்கிறது. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் சரிவை கண்டு வருகிறது. பிரதமர் மீதமான நம்பிக்கையே இதற்கு காரணம்.

வரப்போகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தனது முழு பலத்தை வெளிப்படுத்தும். ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு அர்ப்பணித்து கொண்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சீர்சிருத்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர். நாடு முழுவதும் நடக்கின்ற தேர்தல்களில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.