சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தபடி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புபேருந்துகள் இயக்கப்படும். இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
unknown node