திமுகவினருக்கு என்ன கோபம்.? என்மீது கை வையுங்கள்.. அண்ணாமலை பேச்சு.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இதனை அடுத்து சிலர் ஆடுகளை வெட்டி அதனை வீடியோ , புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
இன்று பிற்பகல் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், வாயில்லா ஜீவன் உங்களை என்ன செய்தது.? என்மீது கோவம் என்றால் என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க. நான் இங்கே கோவையில் தான் இருக்க போகிறேன். இங்கு தான் விவசாயம் செய்து வருகிறேன்.
திமுகவினருக்கு என் மீது என்ன கோவம் என்று தான் தெரியவில்லை. என் மீது கோவம் என்றால் என் மீது கை வையுங்கள். சிலர் ஆடுகளை வெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். வாய் பேசமுடியாத ஆடுகளை ஒன்றும் செய்யவேண்டாம் என செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025