அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை..! விஷச்சாராய விவகாரத்தில் எல் முருகன் கண்டனம்!

கள்ளக்குறிச்சி : புதன்கிழமை (19) விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ” கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 16 பேர் பலியாகியுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்கள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியும், மக்கள் மீது அக்கறை இல்லாத போலி திராவிட மாடல் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடந்துள்ளது. புகார்கள் பல இருந்த போதும் அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை.
அதன் விளைவால் தற்போது கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் இறந்துள்ள துயரச் சம்பவம் நடந்தேறி உள்ளது. இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன் கள்ளச்சாராயத்தால் இறந்து போன நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டையும் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். அதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025