டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பேசும்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என்று பேசியிருந்தார். இதனையடுத்து, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்”அண்ணல் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தானது பாடப்பட்டது. அதில், ‘சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்’ எனப் பாடுவதற்குப் பதிலாக ‘கண்டமதில்’எனப் பாடினார்கள். இதனால், மீண்டும் உதயநிதி பாடச்சொன்ன போது, அதிலும் தவறாகவே படித்திருப்பார்கள். அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்து உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, அவரது விளக்கத்திற்கு சாடியும், அவரிடம் சில […]
டெல்லி: புதிய நாடாளுமன்றம் துவக்க நாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், மக்களவையில் செங்கோல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக ஆட்சியில் செங்கோலை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். செங்கோல் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கருத்து […]
கள்ளக்குறிச்சி : புதன்கிழமை (19) விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து மத்திய […]
Election2024 : மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தின் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் கூடுதலாக நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதில், முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்திருந்தது. அதன்படி, உபியில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6, மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் […]
ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்விநேரம், விவாதம் என இன்று (பிப்ரவரி 9) வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! […]
தமிழகத்தில் நாளை தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு விதமான பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.! இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி […]
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கோவிலுக்குள் பிரச்சனையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பக்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ரத்தம் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. […]
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம். இன்று நாடுமுழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பி அண்ணல் அம்பேத்கர். மேலும் அவர் பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மை வல்லுனராகவும் […]
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்கனவே, […]
2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. என சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார். இன்று பிரதமர் மோடி , மத்திய வேலைவாய்ப்பு மூலம் பணியில் சேர்ந்த 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி பின்னர் அவர் […]
புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில், ஸ்ரீ வெங்டேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் Modi@20 எனும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்ததும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துகொண்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரி மீனவர்களுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அதுகுறித்து பேசிய அவர், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என […]
நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று […]
மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இது போன்று நம் பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கே வழிகாட்டும் நாடாக இந்திய நாடு உயர்ந்து வருகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.பெருமிதமாக குறிப்பிட்டார். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பாக 75வது இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி, […]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் […]
சென்னை:நாம் தமிழர் கட்சி சார்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,குறுக்கிட்ட திமுகவினரின் செயல் குறித்து,கருத்து சுதந்திரத்தை பலி கொடுப்பது திமுகவினரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே […]
மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவுக் கொள்வோம் என அமைச்சர் எல்.முருகன் ட்வீட். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும், அரசியல் களத்திலும் பல வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை […]
அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வாழ்த்துக்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களும் தன் பக்கத்தில் ட்விட்டர் பக்கத்தில் மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழும் அமுதும் போல், கடலும் அலையும் போல், மீனவர் நலனையும், மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம். இந்நாளில் […]