Tag: Spurious liquor

நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்- வைரமுத்து!

கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்’ என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மற்றும் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில்,   இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

#Vairamuthu 5 Min Read
Vairamuthu

விஷசாராய விவகாரம் : கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

கள்ளக்குறிச்சி : விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்க்ளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகத்தையே உலுக்கி உள்ளது . விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த […]

illicit liquor 5 Min Read
3 people arrested

கள்ளக்குறிச்சி துயரம் : அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் – பா.ரஞ்சித் கடும் கண்டனம்!

கள்ளக்குறிச்சி : விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, கண்டனம் தெரிவித்துள்ளார். இது […]

illicit liquor 5 Min Read
pa ranjith

கள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி : மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில்  ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்து அஞ்சலி […]

illicit liquor 4 Min Read
UdhayanidhiStalin

வரும் ஜூன்-22 ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், விஷச்சாராயம் அருந்தி 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக அரசை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவரது க்ஸ் தலத்தில் இந்த சம்பவத்தை குறித்து மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பதிவிட்டுள்ளார். அந்த […]

#Annamalai 6 Min Read
BJP , Annamalai

விஷச்சாராய விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவை – உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

கள்ளக்குறிச்சி : விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டு அந்த விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசி ஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி அதிகாரி […]

#AIADMK 3 Min Read
chennai high court

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது, இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டு அதை அருந்தியதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அதிரடியாக […]

illicit liquor 5 Min Read
MK Stalin

அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை..! விஷச்சாராய விவகாரத்தில் எல் முருகன் கண்டனம்!

கள்ளக்குறிச்சி : புதன்கிழமை (19) விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர்  உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து மத்திய […]

illicit liquor 5 Min Read
l murugan

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு.!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விஷச்சாராயம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை ஏற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேர், சேலத்தில் 9 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் […]

illicit liquor 3 Min Read
death