கள்ளக்குறிச்சி : கடந்த ஜூன் மாதம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 பேர் விஷச்சாராய அருந்தி உயிரிழந்தனர். கடந்த ஜூன்-19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்தனர். இந்த […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலர் அருந்திய விஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் அளவுக்கு மெத்தனால் இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த […]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அந்தந்த துறை அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்களை இந்த நடப்பு கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரம் முடிந்து விவாதம் நடத்தலாம் என கூறியும் அதிமுக மறுத்து அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் தரப்பில் கூறபடுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக கட்சிகளோடு விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர். இருந்தும் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் […]
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்து வரும் தகவலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தினம் தினம் உயிரிழப்புகள் எண்ணிக்கை அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கின்ற காரணத்தால் கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று காலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்தது. இதனையடுத்து, அடுத்ததாக தற்போது பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சி கலந்த […]
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கள்ளக்குறிச்சி மக்கள் கண்ணீரில் மூழ்கிய சோகத்தில் உள்ளனர். நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது. அதனை தொடர்ந்து மீண்டும், தற்போது 61-ஆக பலி […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை முன்னிறுத்தி நேற்றும் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது. இன்று தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் அதிமுக வெளியேற்றப்பட்டு ஒருநாள் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடையும் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பதாக கூறியிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தனர். அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளிலும், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்று போல இன்றும் கருப்புச்சட்டையுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். அப்போது துறைரீதியிலான கேள்வி நேரம் ஆரம்பிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர். ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இருந்தும் தற்போது விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும், விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ […]
விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகாரித்து கொண்டே செல்கிறது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த […]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்தி அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நாளுக்கு நாள் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது. விஷச் சாராயம் அருந்திய 9 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சையை […]
புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 50ஐ கடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று அவர்கள் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள […]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, விஷச்சாராயம் தயாரிப்பு, விற்பனை, அதன் பாதிப்புகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் […]
சென்னை : கள்ளச்சாராய விவகாரம் குறித்து அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் […]
கள்ளக்குறிச்சி : விஷச் சாராய பலி எண்ணிக்கை நேற்றிரவு வரை 43 ஆக இருந்த நிலையில், தற்போது 51 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கள்ளக்குறிச்சி மக்கள் கண்ணீரில் மூழ்கிய சோகத்தில் உள்ளனர். விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை […]
சென்னை : கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் நிவாரணங்களை அறிவித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர். அதற்கு விளக்கமளிக்க வகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 நாள்களில் அறிக்கை […]
சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர். இந்த கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உரையாற்றினார். அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த […]
சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து தங்களை பேசவிடாத காரணத்தால் அவை நிகழ்வை அதிமுக புறக்கணித்துள்ளது. தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில், அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை […]