கையெடுத்து கும்பிட்ட பிறகும், துடைப்பத்தால் பெண்ணை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

- விழுப்புரம் நொளம்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால், பெண் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, குமார் என்பவரது வீட்டில் 11 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
- சந்தேகமடைந்த கிராம மக்கள் பெண்ணை பிடித்து விசாரித்ததில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது, இதையடுத்து, கிராமப் பெண்கள் ஒன்று கூடி கொள்ளைக்கார பெண்யை சரமாரியாகத் அடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் நொளம்பூர் பகுதியில் பூக்கடை உரிமையாளர் முனுசாமி என்பவர் வீட்டில் நேற்று முன் தினம் பொருட்கள் திருடுபோனது, தெரியவந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நேற்று மாலை மணிவண்ணன் என்பவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் மின்சார கணக்கெடுப்பதாகக் கூறி திருட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதைத்தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற அந்த பெண், திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, குமார் என்பவரது வீட்டில் 11 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
இந்நிலையில், அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, கிராமப் பெண்கள் ஒன்று கூடி கொள்ளைக்கார பெண்மணியை சரமாரியாகத் அடித்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க, அதையும் பொருட்படுத்தாமல் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பத்தால் விளாசினர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த கல்பனா என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025