அதிமுகவில் இணைவது”மொட்டை கிணற்றில் விழுவது மேல்”..!தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு போட்டி..!!

Default Image

அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து பேசிய தங்க தமிழ்செலவன் திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன்.
இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ குழம்பி போய் நான் அ.தி.மு.க.வில் இணைய தூது விடுவதாக கூறுகிறார். அ.தி.மு.க. என்பது மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று கூறினார்.

Related imageமேலும் பேசிய அவர் அ.தி.மு.க.வில் யாருக்கும் தலைமை பண்பு கிடையாது.இதனை தொடர்ந்தே கட்சியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது விருப்பதற்கு பேசி வருகிறார்கள்.ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ. 2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது என்று சாடியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்