ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல் – உதயநிதி ஸ்டாலின்

எஸ்.பி.பி மைறவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி மைறவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல். இதயம் கனக்கும் அஞ்சலி. கலைஞர்களுக்கு மரணம் இல்லை. என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள் எஸ்.பி.பி சார். அவரது குடும்பத்தினருக்கு, ரசிகர்களில் ஒருவனாக எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node