ஆளுநர் தமிழிசை உத்தரவால் புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ்.!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த கிரண் பேடியை நீக்கம் செய்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணை நிலை ஆளுநராக நியமித்து, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை உத்தரவால், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக இருந்த துணை ராணுவ பாதுகாப்பு படையும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் மளிகை சுற்றி பல சாலைகளில் இருந்த முள்வேலி கம்பிகளை போலீசார் அகற்றி வருகின்றனர். மேலும் தமிழிசை உத்தரவால் பாரதியார் சிலை உள்ள பாரதி சதுக்கம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025