Election2024 : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை […]
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம். கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜனவரியில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக […]
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப்பெற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை (காவலர்களை) திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளது. ஆர்டர்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஓராண்டு பயிற்சி முடிந்து ரூ.45,000 ஊதியம் பெறுவோரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட […]
இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம்மிலிருந்து ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எஸ்.பி.ஐ-யில் வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 முறை பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.ஐ […]
திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்பின் வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி […]
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த […]
அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி சென்ற வாரத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தும் […]
போக்குவரத்து தொழிலாளருக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் , கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கவும் ,25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மேலும் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதையெடுத்து […]