மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார் என தமிழிசை தகவல். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியிருந்தது நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த […]
ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு. கோவை மாவட்டம் பேரூர் ஆதீனத்தில் முப்பெரும் விழாவிழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. எந்த ஒரு பக்தி நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன், ஆளுநராக அல்ல. கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. காவி ஆன்மிகத்தை […]
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது என ஆளுநர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதாவது, வரும் திங்கட்கிழமை வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நேற்றுவரை வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு ரவு 10 மணி முதல் […]
தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10, 11ம் வகுப்பு மாணர்வகள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பொதுதேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான முழு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் ராசு வெளியிடும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சியை இழந்தது. பின்னர் முதல்வர் நாராயணசாமி பதிவு ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் அளித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா கடிதத்தை ஏற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பானமையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை […]
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை […]
பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு உட்பட்ட கரைகளுக்கு இன்று சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை ஏற்ற தமிழிசை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் மருத்துவமனையை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் தங்களது முறை வரும்போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு கொடுப்பது, அவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள், […]
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த […]
புதுச்சேரியில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவி ராஜினாமா செய்ததால், தற்போது காங்கிரஸ் கூட்டணி சட்டசபையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலும் […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி […]
புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, […]
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம். அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கூடுதல் பொறுப்பாக துணை […]
எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் […]
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில், தஞ்சை தரணியின் மண்ணின் மைந்தராக சட்டமன்றத்தில் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வானத்தை போல பரந்த மனசு இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையும் பெற்று புலன் விசாரணை செய்தலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக கேப்டனாக மரியாதையுடன் […]
மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது […]
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.ஆனால் இதன் பின்னரும் அவரது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு வந்து வந்து செல்கிறார். இந்நிலையில் கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் […]
தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி பிராமண நிகழ்வு தெலுங்கானா ஹைதிராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி தங்கமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். […]