மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5ம் தேதியுடன் தோ்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரம்ஜான் பண்டிகையையொட்டி 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனிடையே, 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மற்ற தேர்வுகள் நடைபெற்று முடிவு பெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை 9 நாட்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்கள் மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் தள்ளிப்போன தேர்வெழுத பள்ளிக்கு வரவேண்டும்.
அதன்பின் அந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதாவது, மக்களவை தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் 2 மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாரவிடுமுறை, மற்றும் தேர்தல் விடுமுறை தவிர்த்து மற்ற நாட்கள் பள்ளிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025