விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடிகர் தாடி பாலாஜி, 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை பரிசாக வழங்கினார். பின்னர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “என்னால் முடிந்ததை பள்ளிக்கு செய்தேன், அரசுப்பள்ளிகள் தற்போது சிறப்பான பள்ளிகளாக […]
TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை […]
TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
TN School: தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. READ MORE – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தற்பொழுது, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இனி […]
தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால்,மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்: “பொதுத்தேர்வை மாணவர்கள் […]
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு, சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு,முதற்கட்டமாக பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 7.5 சதவீத […]
அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல,அதனை பெருமையின் அடையாளம் என மாற்றுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,மூன்று நாட்களாக […]