நெல்லையில் முன் விரோதத்தால் 3 வயது சிறுவனை கொலை செய்த கொடூரம்!
நெல்லையில் 3 வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை : ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் எனும் பெண் முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறான்.
அதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்த சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் அருகிலிருந்த வீட்டை சேர்ந்த பெண் தங்கம்மாள் எனும் பெண் சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் போட்டு வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் தனது மகன் விபத்தில் இறந்ததற்கு எதிர்வீட்டு குடும்பம் தான் செய்வினை செய்ததாக நினைத்து, அதற்குப் பழி வாங்கும் விதமாகவே தங்கம்மாள் அந்த 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளதாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட இந்த துயர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025