#BREAKING: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்து இயக்கம் ..!

To reduce traffic congestion in Chennai ahead of Pongal festival The buses will run 24 hours a day from today till the 13th

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் சென்னையில் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையத்திற்குச் செல்ல சென்னையில் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் சென்னையில் இருந்து மட்டும் 4,078 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் 11-ம் தேதி இன்று சென்னையில் இருந்து 176 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 1297 பேருந்துகளும் இயக்கப்படயுள்ளது.

12-ஆம் தேதி நாளை சென்னையில் இருந்து 1950 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 1,910 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 13-ஆம் தேதி நாளை மறுநாள் சென்னையிலிருந்து 1952 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 2786 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.