22 வயது பெண்ணிடம் சிறார் ஆபாச படத்தை காட்டிய முதியவர் கைது.!

- சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி காவல் துறை கூறியிருந்தனர்.
- கல்லூரி மாணவிக்கு சிறார் ஆபாச படத்தை காட்டிய சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கவில் உள்ள ஒரு உளவு நிறுவனம் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில் இந்தியா தான் அதிக அளவு ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் அந்த பட்டியலை தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு ஏடிஜிபி அனுப்பி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
அந்த பட்டியலை வைத்து கொண்டு தமிழகத்தில் யார் யார் சிறார் ஆபாச படங்களை பார்க்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பப்பட்டது. முதற் கட்டமாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தமிழக காவல் துறை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி காவல் துறை கூறியிருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025