வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது.! ரூ.76,96,544 அபராதம் வசூல்.!

Default Image

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றுடன் நிறுவைடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியே சுற்றியதால் 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.76,96,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக இதுவரை 1,75,238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala