மதுரையில் நடந்து சென்ற பெண்னிடம் 10 பவுன் நகை வழிப்பறி!
மதுரை:சரவணன் இவர் செக்கானூரணி அருகே கத்தப்பட்டியை சேர்ந்தவர் . இவரது மனைவி பெயர் சுவேதா. இவர் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் 10 பவுன் நகையை கையில் வைத்துகொண்டு நடந்து சென்றார்.அப்போது அப்பகுதியில் சாலையில் சில்லறை நாணயங்கள் சிதறி கிடந்தன. உடனே சுவேதா தனது கையில் இருந்த நகை பையை தரையில் வைத்து விட்டு நாணயங்களை எடுக்க சென்றார்.அப்போது சுவேதாவின் பையில் இருந்த நகையை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பெண் எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுவேதா விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். உடனே போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.