சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்றைய தினம் (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், […]
பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் […]
பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே […]
நரசிம்மரிடத்தில் நாளை என்பது இல்லை என்ற அடிப்படையில் நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அன்றே என்பது ஐதீகம் . கோவிலின் சிறப்பு: யோக நரசிம்மர் கோவில் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்திருத்தலம் 65 ஆவது திவ்ய தேசமாகும். இக்கோயில் கிட்டத்தட்ட 2000 வருடம் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலுக்கு செல்ல 1305 படிக்கட்டுகள் கடந்து செல்ல வேண்டும். இங்கு உள்ள நரசிம்மர் 11 மாதங்கள் […]
நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு. புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் […]
சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு. பழனி அருகே செல்வா விநாயகர், உச்சிகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி மற்றும் ராமசாமி பதில்தர வேண்டும் […]
தமிழகத்தில் கோயில்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,கோயில் விழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது,கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம்.ஆனால்,ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து,இதுதொடர்பான மனுக்களை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,மதுரை முதலைக்குளம் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. […]
மும்பை ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளது என தகவல். நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் 79,154 கோயில்களும்,மகாராஷ்டிராவில், 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் […]
மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து. திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் […]
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் […]
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் வைஷ்ணவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,காயமடைந்தவர்கள் 13 பேர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.எனினும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #UPDATE | Visuals […]
தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 […]
கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் […]
கர்நாடகாவில் 211 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த ஒரு அரசு மத அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், எங்கள் இந்து கலாச்சார மதிக்கும் ஆடைகளை பின்பற்றுமாறு பக்தர்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சேலை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அது அவர்களது உடலை சரியாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும். ஆண்களுக்கும் நாங்கள் […]
இன்று முதல் டெல்லியிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளும் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலும் இரண்டாம் அலையின் பொழுது கொரோனா மிக தீவிரமாக பரவி வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதன் காரணமாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதன் காரணமாகவும் மத […]
தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர். இன்று தாயானாலும், மனைவியானாலும் ஒரு ஆண் அவர்களிடம் நீண்ட நாட்கள் பாசத்துடன் இருப்பது ஆச்சர்யம் தான். இவர்களுக்கு மத்தியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தாய் மற்றும் மனைவிக்கு கோவில் காட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து […]
கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர் ஸ்ரீதரை தற்காலிகமாக நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து […]
பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபடும் பாஜக தொண்டர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மயூர் முண்டே என்ற பாஜக தொண்டர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பிரதமர் மோடி மீதும், பாஜக மீதும் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர் ஆவார். இந்நிலையில், இவர் 1.5 லட்சம் செலவில் பிரதமர் மோடிக்கு மார்பிளவு சிலை வடித்து கோயில் கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலை கட்டும் நிகழ்வை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி […]