பொங்கல் சிறப்பு பேருந்தில் 1.45 லட்சம் பயணிகள் பயணம்...அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்...!!

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும்

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் , பயணிகளின் சிரமங்கள் குறித்தும்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு செய்தார்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சிறப்பு பேருந்து மூலமாக இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர் , பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, இதுவரை 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார் .