அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் 10 பேர் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. தங்கள் மீது சுமத்தப்படும் ஊழல் புகார் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு. கடந்த அதிமுக ஆட்சி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவரது வீடு உள்ளிட்ட சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பின்னர் […]
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை: இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வீட்டில் சோதனை நடைபெற்றது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று எம்.ஆர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம் மற்றும் […]
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐ.டி ரெய்டு என அதிமுக தலைமை கண்டனம். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ஐடி சோதனையால் அதிமுகவினர் […]
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ஆம் தேதி நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார். கொரோனா விதிமுறை காரணமாக ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், புதிய பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தற்போது […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய நிதிநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று தெரிவித்ததோடு […]
அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4-ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதால் சென்னை சென்ட்ரல் பேருந்து பணிமனையில் போக்குவரத்துறை அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும், அடுத்த மாவட்டத்திற்கு […]
கொரோனா தடுப்பிற்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர் போக்குவரத்து ஊழியர்கள். கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி […]
4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் பேசுகையில்,4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.தீபாவளிக்கு, 4265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். தீபாவளி சிறப்பு பேருந்துகள், சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து […]
தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் 7-ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு […]
சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் , பயணிகளின் சிரமங்கள் குறித்தும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு செய்தார் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சிறப்பு பேருந்து மூலமாக இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர் , பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, இதுவரை 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு […]