சென்னை : ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என […]
சென்னை : மைக்ரோசாப்ட் விண்டோஸை மென்பொருளை சார்ந்து இயங்கும் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனமானது மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் பால்கன் சென்சாரை நேற்று முன்தினம் (ஜூலை-18) அன்று அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கிளவுட்சர்வர் தொழில்நுட்ப பயன்பாட்டைக் கொண்டு இயங்கி வரும் விமான சேவை உள்பட பல்வேறு […]
மோசமான வானிலை காரணமாக மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில்,அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான விபத்து தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில்: “மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் நேற்று தரை இறங்கும் போது மோசமான வானிலையை எதிர்கொண்ட நிலையில் விபத்து ஏற்பட்டது.துரதிர்ஷ்டவசமாக ஒரு சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.துர்காபூர் வந்தடைந்தவுடன் உடனடி மருத்துவ உதவி […]
சென்னையில் அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர் மந்தைவெளி மார்க்கமாக சென்ற அரசு மாநகர பேருந்து […]
நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய கொரோனா தடுப்பூ சியான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காததால் பல […]
தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு திரும்ப இந்தியாவிலிருந்து வர அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் சரியான விசா வைத்திருந்தால் செப்டம்பர் 12 முதல் அனுமதி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு பயணிக்க விரும்பும் பயணிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, […]
28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரிலிருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.என்.26 என்னும் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் கம்சட்கா ஏவியேஷன் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானம் 1982 ஆண்டு முதலே செயல்பட்டு வருவதாகவும் சீன நிறுவனமாகிய டாஸ் எனும் நிறுவனம் கூறியுள்ளது. காணாமல் போன விமானம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் பலானாவிற்கு […]
நைஜீரிய நாட்டின் வடமேற்கு கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலா நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக படகு ஒன்று 180 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். […]
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் இரவு மலேசியா செல்ல இருந்த ஒரு விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மூச்சு திணறுவதாக பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது ஆக்ஸிஜன் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் கோளாறு இருந்ததால் விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது. பின்னர்அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது. கடந்த 3-ஆம் தேதி சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து […]
சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும் அரசு பல்வேறு சாலை விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 பேர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின், இவர்கள் அனைவரும் ஒரே ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். ஒரு ஷேர் ஆட்டோவில் 6 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்டோவில் 24 பேர் வந்ததை, அந்த சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் […]
மும்பை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஆந்தை அமர்ந்திருந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமனனம் ஜெர் ஏர்வேஸ் போயிங் . இந்த விமானம் செல்ல தயாராக இருந்த சூழலில் பயணிகள் மற்றும் விமானத்தை செலுத்த விமான ஓட்டுனர்கள் தயாராகினர் . அப்போது பணியாளர்கள் வந்தபோது விமானத்தின் ஓட்டுனர் இருப்பிடத்தில் ஆந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து சென்று தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சுமார் 14 மணி […]
கனடாவில் கடக்கும் குளிரால் விமானத்தின் கதவு திறக்க முடியாமல் உறைந்து போனதால் 16 மணி நேரம் விமான பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் நாடு வேனில் சென்று கொண்டு இருந்த போது ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அந்த விமானம் கனடா நாட்டில் தரையிறக்கப்பட்டது.பின் அந்த பயணி வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கனடாவில் இருந்து கிளம்ப விமானம் தயாரான பொது குளிரால் விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டு விமானத்தின் கதவு திறக்க […]
சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் , பயணிகளின் சிரமங்கள் குறித்தும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு செய்தார் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சிறப்பு பேருந்து மூலமாக இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர் , பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, இதுவரை 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு […]