பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க […]
தமிழர் தை திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு பொதுமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. திமுக நிர்வாகிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் சமத்துவ பொங்கல் என பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவ பொங்கலாய் இது அமைய வேண்டும். ஆரிய பண்பாட்டு தாக்கமின்றி, திராவிடர்களாம் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19, 484 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 பஸ்களும், பிற இடங்களில் இருந்து 8,748 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 19, 484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, […]
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் மற்றும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் ஜன.13-ம் தேதி […]
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு […]
பொங்கல் பரிசுத் தொகுப்பை நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது […]
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஜனவரி […]
தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டார். இந்த ஆலோசனை முடிந்தபிறகு, பொங்கல் சிறப்பு பேருந்துகள் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், மாநிலம் முழுவதும் 19,484 […]
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி […]
பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ம் தேதி நியாயவிலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணி நாளை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 10ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதுவும், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழக […]
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் நாளை முதல் ஜனவரி 9ம் தேதி […]
இந்தாண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், ரொக்க பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், விலையில்லா வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் […]
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் இவற்றை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு […]
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச […]
பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்! போகி பண்டிகைக்கு […]
புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மகளீர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பனை ஓலை பொருட்கள் இடம்பெற்றுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.