தமிழகத்தில் ஒரே நாளில் 6988 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து இன்று 6,998 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,32,455 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனாவால் இன்று 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.