தமிழகத்தில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கை மீறி வந்தவா்களிடம் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.