தமிழகத்தில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கை மீறி வந்தவா்களிடம் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிற்குள்ளே இருப்பது மிக கடினமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறினார். கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த தளர்வு, விளையாட்டு துறைக்கு அளிக்கப்படாத நிலையில், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி […]
திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அதாவது ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இதில் பல துறையினருக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் பள்ளிகள் திறப்பதற்கும் பொருந்தும். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாக தெரிவித்தனர். […]
நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகளை மட்டும் 60 சதவீத பயணிகளுடன் (40 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மற்ற இரு மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி […]
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு […]
தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்களில், மண்டலம் 7 மற்றும் 8 இல் பெருத்து இயங்குவதற்கான தடை ஜூன் 30 வரையில் தொடர்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலம் 7 (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), மண்டலம் 8 ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, […]
தமிழகத்தில் மறுஉத்தரவு வரும்வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் […]
மத்திய அரசின் 5ஆம் கட்ட ஊரடங்கு நெறிமுறைகளின் படி, தமிழத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ பாஸ் அவசியமில்லை. ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் அவசியம். மேலும், மண்டலங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது. தமிகத்தில் பிரிக்கப்பட்ட அந்த 8 மண்டலங்கள் : மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் […]
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 8 மண்டலத்திற்குள் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் அவசியம். மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால், ஒரு […]
இனி இ-பாஸ் இன்றி எங்குனாலும் பயணிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளை அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்கம் […]
இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 […]
இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 […]
மஹாராஷ்டிராவில் பொதுமுடக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் அறிவித்தார். மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்தே வருகிறது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 2,098 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து அம்மாநில மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை […]
நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்பொழுது இது நாளை (மே 31) ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். […]