அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைவார் – மகன் சரண்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, எஸ்.பி.பி உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாகவும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், எஸ்.பி.பி சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். தற்போது, அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைவார் என்று தெரிவித்துள்ளார்.