WhatsApp Down: இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் செயலிழந்த வாட்ஸ்அப் !

Default Image

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸாப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக  செயலிழந்துள்ளது.

இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.செயலிழப்பு கண்டறிதல் இணையதளம் DownDetector ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்களும் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.அதை மீண்டும் செயல்பாட்டுக்கு  கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக்குடன் பயனர்கள் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்