இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு.?

Default Image

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள்.

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் முறையாக காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று பார்க்கலாம்.

2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – இவற்றுக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 27 லட்ச கோடிக்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் புதிய தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1.01 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ரயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • பேருந்து வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • காற்றுமாசு கட்டுப்பாடு திட்டத்திற்கு ரூ.2,217 கோடி நிதி ஒதுக்கீடு.
  • கொச்சி மெட்ரோ ரயில் மேம்பாட்டிற்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • மேற்குவங்கத்தில் சாலை பணிகள் மேம்பாட்டுக்கு ரூ.95 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மின்னணு முறையில் மேற்கொள்ள ரூ.3,768 கோடி ஒதுக்கீடு.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி, சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவ ரூ.35,219 கோடி நிதி ஒதுக்கீடு.
  • உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • கிராமபுற உள்கட்டமைப்புக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க திட்டம்.
  • நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • கொரோனாவுக்கு மேலும் இரண்டு தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்