மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட் தாக்கலில் எந்தவொரு சலுகையும் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான […]
ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் என்பது வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை உருவாக்குவதையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊக்கமும் கொண்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் […]
மத்திய பட்ஜெட் தாக்கலில் கவர்ச்சி திட்டங்களை மட்டுமே மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பதாகவும், வேலைவாய்ப்பு குறித்து எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ஏற்கனவே நிதிநிலையில் மிகப்பெரிய பின்னடைவில் இருக்கக்கூடிய இந்தியா, பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிடிபி மேலும் குறையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், அதை பெருக்குவதற்கான எந்த திட்டமும் […]
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் அதிமுக எம்பி தம்பிதுரை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை, தம்பிதுரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் […]
வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது பெட்ரோல் மீது ரூ.2.50 ,டீசல் மீது ரூ.4 கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் முறையாக காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று பார்க்கலாம். 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – இவற்றுக்கெல்லாம் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் 10 முக்கிய அம்சங்கள் அறிவிப்பு. 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் முக்கிய 10 அம்சங்கள் பின்வருமாறு. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா […]
ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் PM AatmanirbharSwasthBharatYojana என்னும் புதிய மத்திய திட்டம் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இயற்றலும் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் வரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். திருக்குறளின் பொருள் : “பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை […]
75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு […]
ரயில்வே துறைக்கு முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படு.ம் அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023-ஆம் […]
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நகர்ப்புறங்களிலும், நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,கொரோனா தடுப்பு ஊசி போட படுவதற்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ.35,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
8 கோடி குடும்பத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாக கூறினார். மேலும் 8 கோடி குடும்பத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தொடங்கியது. அதன்படி, கடந்த 29 முதல் பிப்.15 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை 2வது அமர்வும் நடைபெறுகிறது. இதனிடையே, கடந்த 29-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி, 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை […]
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குழுவினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் […]
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். வழக்கமாக பட்ஜெட் தாக்கல் பெட்டியினுள் வைத்து […]
டிஜிட்டல் பட்ஜெட் உரையுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குழுவினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.