மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட் தாக்கலில் எந்தவொரு சலுகையும் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான […]
நாளை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வருகின்ற 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் போது, வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், 208 கோடி தேவைப்படுகின்ற ராமேஸ்வரம் […]
நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை […]
ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் என்பது வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை உருவாக்குவதையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊக்கமும் கொண்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் […]
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக, அதனை வரவேற்பதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 15-ஆவது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் தமிழகத்தின் பங்கினை குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிக்கிறது. 2021-22 முதல் 2025-26 […]
மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் மத்திய பட்ஜெட் இருக்கிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால ஊரடங்கு. ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட […]
மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி […]
பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும், விற்கப் போவதாக நிதி அமைச்சர் […]
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட் தாக்கலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு பற்றி […]
மத்திய பட்ஜெட் தாக்கலில் கவர்ச்சி திட்டங்களை மட்டுமே மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பதாகவும், வேலைவாய்ப்பு குறித்து எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ஏற்கனவே நிதிநிலையில் மிகப்பெரிய பின்னடைவில் இருக்கக்கூடிய இந்தியா, பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிடிபி மேலும் குறையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், அதை பெருக்குவதற்கான எந்த திட்டமும் […]
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் அதிமுக எம்பி தம்பிதுரை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை, தம்பிதுரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய மத்திய பட்ஜெட் தாக்கல் உரையின் போது, சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்காக பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி […]
வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது பெட்ரோல் மீது ரூ.2.50 ,டீசல் மீது ரூ.4 கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் முறையாக காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று பார்க்கலாம். 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – இவற்றுக்கெல்லாம் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் 10 முக்கிய அம்சங்கள் அறிவிப்பு. 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் முக்கிய 10 அம்சங்கள் பின்வருமாறு. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா […]
ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் PM AatmanirbharSwasthBharatYojana என்னும் புதிய மத்திய திட்டம் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் தாள்கள் மூலம் தாக்கல் செய்யப்படும், ஆனால், இந்த முறை வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியபோது, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, […]
இயற்றலும் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் வரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். திருக்குறளின் பொருள் : “பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை […]