தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்பிக்களில் 24 பேர் தற்போது டெல்லியில் பதவியேற்றுள்ளனர்.அவர்களில் குறிப்பாக,கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல்,காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் உள்ளிட்டோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுள்ளனர்.புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியை இன்று மாலை புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். […]
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின் சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் […]
நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய […]
பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 80 மில்லியன் மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது மற்றும் 400 மில்லியன் மக்கள், விவசாயிகள், பெண்கள் ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சியில் உள்ள சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது.நாங்கள் […]
நாளை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வருகின்ற 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை […]
மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி […]
வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது பெட்ரோல் மீது ரூ.2.50 ,டீசல் மீது ரூ.4 கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் முறையாக காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று பார்க்கலாம். 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – இவற்றுக்கெல்லாம் […]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் 10 முக்கிய அம்சங்கள் அறிவிப்பு. 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் முக்கிய 10 அம்சங்கள் பின்வருமாறு. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா […]
ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் PM AatmanirbharSwasthBharatYojana என்னும் புதிய மத்திய திட்டம் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இயற்றலும் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் வரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். திருக்குறளின் பொருள் : “பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை […]
75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரயில்வே துறைக்கு முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படு.ம் அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023-ஆம் […]
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நகர்ப்புறங்களிலும், நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,கொரோனா தடுப்பு ஊசி போட படுவதற்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ.35,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
8 கோடி குடும்பத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாக கூறினார். மேலும் 8 கோடி குடும்பத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தொடங்கியது. அதன்படி, கடந்த 29 முதல் பிப்.15 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை 2வது அமர்வும் நடைபெறுகிறது. இதனிடையே, கடந்த 29-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி, 2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை […]