தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை.
1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானை, இந்தியா போரில் வீழ்த்திய நாள் வெற்றி தினமாக இன்று நாடு முழுவதும் கொண்ண்டாடப்படுகிறது. இந்த நிலையில், வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர்.
பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக முப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தான் போரில் உயிரை தியாகம் செய்து இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.