2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் […]
தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை. 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானை, இந்தியா போரில் வீழ்த்திய நாள் வெற்றி தினமாக இன்று நாடு முழுவதும் கொண்ண்டாடப்படுகிறது. இந்த நிலையில், வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக முப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தான் போரில் உயிரை தியாகம் செய்து […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது. நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதனிடையே, நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை இரு […]
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய ராணுவ முறையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு இன்று வரலாற்று […]
உத்தரபிரதேச மாநிலத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் யோகி ஆதித்யநாத் அரசை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]
அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் […]
இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் சந்தித்ததை தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூலம், ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், டெல்லியில் வெள்ளிக்கிழமை வரை […]
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலையில் மூன்றாவது […]
மத்திய பாதுகாப்பு அமைச்சர் 24-25 தேதிகளில் சிக்கிமுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது எல்லையில் உள்ள வீரர்களுடன் உரையாடுவார் எனவும், ஆயுத பூஜையையும் செய்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சீன எல்லைக்கு அருகே சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் ஆயுதங்களை வழிபட்டு பூஜை செய்தார். மேலும், எல்லை சாலைகள் அமைப்பு, உள்கட்டமைப்பு திட்டத்தை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.
சீனாவுடனான தற்போதைய எல்லை மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகின்ற 23-24 தேதிகளில் சிக்கிம் செல்ல உள்ளதாகவும், அங்கு வீரர்கள் மற்றும் மக்களை எல்லைப் பகுதிகளுக்கு எளிதாக செல்வதற்கு கட்டப்பட்ட பல சாலை மற்றும் பாலங்களை திறந்து வைப்பார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சீன எல்லைக்கு அருகிலுள்ள சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள உள்ளூர் பிரிவுகளில் ஒன்றில் தசராவின் போது ஆண்டுதோறும் போர்வீரர்கள் ஆயுதங்களை வணங்குகிறார்கள். எனவே இந்த பூஜையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் […]
இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாய வல்லுநர்களுடன் வேளாண் சட்டங்கள் குறித்து ஒரு ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேசிய விதை சங்கத்தின் தலைவர் எம். பிரபாகர் ராவ், சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் விதை தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது விதைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும், இந்த முடிவில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 2000 பக்க தீர்ப்பை வாசித்தார் எஸ்.கே.யாதவ். அதில், பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல , அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட […]
சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் பேசினார்.அவர் பேசுகையில், இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.லடாக் பகுதியில் 38,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. […]
சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசை (எல்ஐசி) முன்னேற்றங்கள் குறித்து இன்று மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக செவ்வாய்க்கிழமை மக்களவையில் தனது அறிக்கையை வெளியிட்டார். மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்கின் உரை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசை (எல்ஐசி) முன்னேற்றங்கள் குறித்து நாளை மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக செவ்வாய்க்கிழமை மக்களவையில் தனது அறிக்கையை வெளியிட்டார். மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்கின் உரை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்நாத் சிங், […]
சீனாவுடன் எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2 -வது நாளாக மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியது. இந்நிலையில், இன்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு […]
கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைதொடந்து, எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு தரப்பிலும், பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், […]
இந்தியா அண்டை நாடுகளிடமிருந்தும் இதையே எதிர்பார்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுபவர்களுக்கு, ரபேல் போர் விமானம் சேர்க்கப்பட்டது வலுவான எச்சரிக்கை. இந்திய எல்லையில் தற்போது நிலவும் […]
இன்று அம்பாலா விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பிளாரன்ஸ் பார்லி இந்தியா வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் […]