பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டு கொலை...!

Two Pakistanis have been shot dead by security forces as they tried to cross the Indian border via Punjab.

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனை அஎடுத்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உயிரிழந்த இருவரும் யார் என்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.