ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]
சென்னை : இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அரிசியால் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு மத்திய, […]
ராமேஸ்வரம் : நேற்று முன்தினம் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்த 34 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இன்று அதிகாலை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அப்போது இலங்கை கடற்படையின் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 மீனவர்கள் […]
அமெரிக்காவில், மைனே மாகாணத்தில், லூயிஸ்டன் நகரத்தில் நேற்று (புதன்) இரவு வணிகவளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். லூயிஸ்டன் நகர வணிக வளாகத்தில் உள்ள பார், உணவகம், சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அந்த மர்ம நபர் நவீன ரக துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுள்ளான். சம்பவம் நடத்திய மர்ம நபர் இன்னும் கிடைக்கவில்லை என்றும், […]
ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பாதுகாப்பு படை. ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில்சோதனையின்போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டுள்ளனர். இதன்பின் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் லாரியில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், லாரியில் இருந்து 7 ஏகே47 ரக துப்பாக்கிகள், 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மெக்டொனால்டு வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர் மீது போலீஸ் துப்பாக்கிசூடு. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு சென்ற இளைஞர் வாகன நிறுத்துமிடத்தில் சாப்பிடும் போது போலீஸ்காரரால் சுடப்பட்டார். McDonald-ல் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 17 வயது இளைஞனை புதிய போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 17 வயது இளைஞர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த காரைப் பார்த்ததும் பேக்அப் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். காரின் டிரைவரின் பக்கமாக நடந்து […]
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாகியால் சுட்டு காவலர் தற்கொலை. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவலர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு […]
புதுக்கோட்டை:துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு […]
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அங்குள்ள லேக்லேண்டில் இருக்கும் இரண்டு வீடுகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் கைக்குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை மீண்டும் பலமுறை சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் ஒருவர், […]
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல். ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில், ஆப்கான் நாட்டு தேசிய கொடியை கையில் எடுத்து மக்கள் கொண்டாடியதால் தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது. Taliban soldiers did fire to disperse the crowds in Jalalabad […]
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் […]
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் ராகேஷ் பண்டிடா சோம்நாத் அவர்கள் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் அவ்வப்போது அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ட்ரல் நகராட்சியின் கவுன்சிலராக செயல்பட்டு வந்தவர் தான் பாஜக கட்சியை சேர்ந்த ராகேஷ் பண்டிடா சோம்நாத். இவர் ஸ்ரீநகரில் போலீசாரின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நபர் ஒருவர் தனது மனைவி உடலுறவு கொள்ள வர மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, அவரது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி எறிந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 […]
மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரொலி எடப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின் சி-60பிரிவு காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த எடப்பள்ளி பகுதியில் அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பொழுது அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறையினருக்கு மாவோயிஸ்டுக்கும் நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. […]
அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
அமெரிக்காவில் உள்ள ஐடோஹா எனும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஐடஹோ எனும் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரக்கூடிய ஆறாம் வகுப்பு சிறுமி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். தனது பள்ளி மாணவி மற்றும் வகுப்பு தோழர்கள் மீது இந்த பெண்மணி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு […]
காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டம் கணிகாம் எனும் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்து உள்ளனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் […]