படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு – பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்பு

In Delhi, the Republic Day celebrations are in full swing with the return of the troops to Basara.

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக படை வீரர்கள் பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

டெல்லியில் விஜய் சவுக்கில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. முப்படைகளை சேர்ந்தவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.