இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை […]
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அக்.25ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் […]
கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைளின் சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது, பத்ம விபூஷன், பத்ம பூஷன் , பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி […]
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இருவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்ட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை […]
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் முதல் முறையாக இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் […]
குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 5 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நேற்று சட்டப்பேரவையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, இன்று காலை கோவையில் இருந்து உதகை செல்லவுள்ளார். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், […]
டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்தார். இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். இதனால், ஜனாதிபதி டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி வந்தடைந்தார். விமானநிலையத்தில் ஆளுநர் […]
தமிழகத்திற்கு குடியரசு தலைவர் வருகையையொட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார் என பாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். படம் திறப்பு விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, நிகழ்ச்சி […]
ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம். 2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக சமூக போராளி ஸ்டேன் சுவாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை என்ஐஏ அமைப்பு விசாரித்து வந்த நிலையில், […]
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த மறுநாளே டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு இதய அறுவை சிகிச்சை […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி […]
குடியரசு தலைவரின் கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியரசு தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வாய்ப்புகளுக்கான நாடக மாறியுள்ளது. தற்போது நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. இளைஞர்கள் தங்கள் கனவுகளை […]
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை. தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக படை வீரர்கள் பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. டெல்லியில் விஜய் சவுக்கில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. […]
வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான […]
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று சென்னை வந்து திருப்பதி செல்லவிருக்கிறார். அவரை வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று திருப்பதி வரவுள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு வரவேற்பு செலுத்தப்படும். அதனைதொடர்ந்து காலை 9.45 மணிக்கு மணியளவில் திருப்பதி செல்லவுள்ளார். பின் மாலையில் தரிசனத்தை […]