ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சோகம்.!
![Aanvi Kamdar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/07/y-Anvi-Kamdharanda.webp)
மகாராஷ்டிரா : ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27), ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளர்.
மும்பையைச் சேர்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு மழைக்காலப் பயணமாக, மங்கான் பகுதியில் சுற்றி பார்க்க வந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் விழுந்தார்.
கம்தாரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அன்வி 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த அன்வி காம்தர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தயாரிப்பதில் பெயர் பெற்ற சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2,50,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)