“மற்றவர்களை நம்பியிருந்தால் முன்னேற்றம் இல்லை” – பிரதமர் மோடி.!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், இதுவே எங்கள் அரசின் மந்திரம் என்று நொய்டாவில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

PM Modi Speech - Make In India

உத்தரப் பிரதேசம் :பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9:30 மணியளவில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி (UPITS) 2025-ஐ தொடங்கி வைத்தார்.  இந்தக் கண்காட்சி செப்டம்பர் 25 முதல் 29 வரை நடைபெறுகிறது. இது இந்தியாவின் தொழில்நுட்பம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள திறன்களை உலகுக்கு வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கிய தளமாக அமைகிறது.

இந்த வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பின் பேசிய பிரதமர் மோடி,  “இந்தியா சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு பொருளையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இடையூறுகள் நம்மை திசை திருப்பாது. அதில் புதிய திசைகளையும் புதிய வாய்ப்புகளையும் காண்கிறோம் உலகில் இடையூறுகள், நிச்சயமற்றதன்மை இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சுவாரஸ்யமாக உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், Reform(சீர்திருத்தம்), Perform(செயல்பாடு), Transform(உருமாற்றம்) இதுவே எங்கள் அரசின் மந்திரம். மற்றவர்களை நம்பியிருப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது, மற்றவர்களை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் வளர்ச்சி, வரம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தியா தன்னம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். ஆயுதப் படைகள் உள்நாட்டு தயாரிப்புகளை விரும்புகின்றன,பிறரை சார்ந்திருப்பதை குறைக்க எண்ணுகின்றன.ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையை தாங்கும் அமைப்பை உருவாக்குகிறோம்” என்று பேசியுள்ளார்.