#Breaking:பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

மேற்கு வங்கத்தில் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பட்டாசுகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில்,பசுமை பட்டாசுகள் வெடிக்க தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பட்டாசு விற்கவும்,வெடிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,எந்தவிதமான அடிப்படை விசயங்களையும் அலசி ஆறாயாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில், உச்சநீதிமன்றம்,தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் படி பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமது உள்ளது.இதனால்,ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி,மேற்கு வங்கத்தில் ,பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும்,பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவானது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும்,அதிலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் மட்டும் விலக்கு பெறமுடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025