‘ரூபாய் 5,00,00,00,00,00 கடன் வாங்கிட்டு ஓட்டம்’ வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு “நீளும் மோசடி பட்டியல்..!!

Default Image

விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து அடுத்ததாக குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வங்கியில் 5 ஆயிரம் கோடி கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image result for விஜய் மல்லையா, நீரவ் மோடியைகுஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

Image result for ஆந்திர வங்கிமேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடங்கியுள்ளது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.

அவர் துபாயில் இருப்பதாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன்  குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for ரூபாய் 5,00,00,00,00,00 கடன் வாங்கிட்டு ஓட்டம்விஜய் மல்லையா , நீரவ் மோடி ஆகியோரால் மத்திய அரசு கடுமையாக வசைபாடப்பட்டது.இந்த சுழலை தற்போது நிதின் சந்தேசரா விவகாரம் மத்திய அரசுக்கு கூடுதல் சிக்கலை கொடுக்கவுள்ளது.தற்போது ரபேல் போர் விமானம் தொடர்பான ஊழலில் எதிர்கட்சிகள் கடுமைக மத்திய அரசை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

school - chennai imd
Amaran - Tamil Nadu BJP
queen elizabeth wedding
Kanguva
tn govt
09.11.2024 Power Cut Details
Ramya Pandian Wedding