பாரத் பயோடெக்கின் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசி..!

The Delhi Aiims will soon conduct a phase 2 and 3 phase trial of Bharat Biotech's nasal spray vaccine

பாரத் பயோடெக்கின் மூக்குவழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் விரைவில் மேற்கொள்ள உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) “ஓரிரு வாரங்களுக்குள்” தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிபிவி154 (BBV154) இன்ட்ரானசல் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றது.

இந்த இரண்டு நிலைகளுக்கும், எய்ம்ஸ் நெறிமுறைக் குழுவின் கட்டாய அனுமதி தேவை, இதற்காக ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி,எய்ம்ஸின் ஒப்புதலைப் பெற்றவுடன், இரண்டு வாரங்களுக்கு இடையில் நான்கு வார இடைவெளியில், தன்னார்வலர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்தப்படும்.

இத்தகைய சோதனைகள் டாக்டர் சஞ்சய் ராய் தலைமையில் நடைபெறும். இரண்டாவது கட்டம் முழுமையாக முடிந்த பின்னரே மூன்றாவது கட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பிபிவி154 நாட்டில் மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் பயோடெக்னாலஜி இன்டஸ்ட்ரி ரிசர்ச் அசோசியேட் கவுன்சில் (BIRAC) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சோதனைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 அன்று தொடங்கியது.அதன் 3 வது கட்ட மருத்துவ பரிசோதனைகளில், கோவாக்சின் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 77.8% மற்றும் நோயின் கடுமையான  தாக்கத்திற்கு எதிராக 93.4% செயல்திறனை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.