Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் உலகை ஆட்டி படைத்த கொரோனாவை கட்டுப்படுத்த உலகில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர். இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவிஷீல்டு. அதனை சீரம் […]
இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது நாசி தடுப்பூசிக்கான 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு DCGI இன் ஒப்புதலை கடந்த மாதம் கேட்டிருந்தது. பயோடெக் நிறுவனம் ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பு DCGI நிபுணர் குழுவிற்கு நாசி தடுப்பூசி பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தது. இந்நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு […]
12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் செலுத்த ஒப்புதல் இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை , 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் […]
ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் ஓமன் நாட்டிற்கு தனிமைப்படுத்துதல் இன்றி செல்லலாம் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்பொழுதும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் […]
பாரத் பயோடெக்கின் மூக்குவழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் விரைவில் மேற்கொள்ள உள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) “ஓரிரு வாரங்களுக்குள்” தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் […]
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால்,தடுப்பூசி உற்பத்தியை […]
கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் […]
கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு,பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை என்று WHO தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு,அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி WHO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) நிறுவனம்,கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (ஈயூஎல்) பெறுவதற்காக,ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், […]
ஜூன் மாதம் முதல் கோவக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்பொழுது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவது மட்டுமே என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள […]
கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பார்முலாவை பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே,கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கோவாக்சின் மருந்தினை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும்,கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தினை சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. ஆனால்,கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது,மேலும் தீவிரமடைந்துள்ள […]
2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து,கடந்த மே மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணியில்,கோவாக்சின்,கோவிஷீல்ட் […]
மத்திய பிரதேசத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தடுப்பூசி போட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது குறித்த விளக்கத்துடன் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இதயம் மற்றும் நுரையீரலின் செயலிழப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி அளவு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை பாரத் பயோடெக் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து தடுப்பூசி அளவுகோல்களையும் […]
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்காக தன்னார்வலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில், உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் 13,000 தன்னார்வலர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக, பயோடெக் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 26,000 தன்னார்வலர்களை நியமிக்க பரிசீலித்து வருகிறது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 13,000 […]
பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறது. முந்தைய தினங்களை காட்டிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறிவதற்காக பல்வேறு கட்டமாக […]
பாரத் பயோடெக் தயாரிக்கும் “கோவாக்சின்” கொரோனா தடுப்பூசியின் 3 கட்டம் சோதனையை எய்ம்ஸில் தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் ‘கோவாக்சின்’ உருவாக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சினின் 3-ஆம் கட்டம் மனித மருத்துவ பரிசோதனை நேற்று எய்ம்ஸில் முதன்மையான நிறுவனத்தில் உள்ள நரம்பியல் மையத்தின் தலைவர் டாக்டர் எம் வி பத்ம ஸ்ரீவாஸ்தவா மற்றும் மூன்று தன்னாலவர்கள் முதல் அளவைப் பெற்றனர். எய்ம்ஸில் சுமார் […]
இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட […]
உத்தரபிரதேசத்தில் பாரத பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை தொடங்கபடவுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் பரிசோதிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் கோரக்பூரில் அதன் 3வது கட்ட சோதனையை தொடங்கவுள்ளது . இது குறித்து சுகாதாரதுறை தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர் வி.கிருஷ்ணா மோகனுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இரு நகரங்களிலும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை […]
தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. […]
பாரத் பயோடெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் செப்டம்பர் 7 முதல் 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த மைய ஒப்புதலை பெற்றது. ஐசிஎம்ஆர்-வுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாக்சின் மருந்தை அடுத்த சில மாதங்களுக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. […]
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. பாரத் பயோடெக் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் நேற்று ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையின்படி, தடுப்பூசி பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் இந்த செயல்முறை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடவும் குறைந்த அளவு தடுப்பூசி தேவைப்படுவதால் கோவாக்சின் மலிவானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும் […]