மத்திய அரசின் முடிவு  தேவையில்லாதது – மன்மோகன் சிங்

Default Image

அகவிலைப்படி உயர்வை நிறுத்திய மத்திய அரசின் முடிவு  தேவையில்லாதது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.எனவே கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்குஇடையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது, இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதைப் போன்ற கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.ஊழியர்களின் பக்கத்தில் தான் நாம் நிற்கவேண்டும்.அகவிலைப்படி உயர்வை நிறுத்திய மத்திய அரசின் முடிவு  தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்