பிரதமரை தாக்குவதற்கு பயங்கரவாதிகள் திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரு மாதங்களுக்கு முன்னர் கூட இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், கடலோர எல்லைகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், குஜராத் கடலோர பகுதிகளில் ஆளில்லா படகுகள் நிற்கவைக்க பட்டிருந்தன. மீண்டும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
தற்போது வந்த தகவலின்படி காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது தற்போது பதன்கோட்டில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் வட இந்தியாவின் சில பகுதிகளை தாக்குவதற்கு திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அவர்களின் குறி பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவர் ஆகியோர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமானப்படையில் தற்போது ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.